அமில சுரப்பு
பொதுவாக உண்ணும் உணவு செரிமானமாவதற்கு இரைப்பையில் சுரக்கும் அமிலம் தான் உதவியாக உள்ளது. ஆனால் இந்த அமிலமானது அளவுக்கு அதிகமாக சுரக்கும் போது, அவை இரைப்பையை அரிக்க ஆரம்பித்து, வயிற்றில் எரிச்சலை உண்டாக்குகிறது. இவ்வாறு வயிற்றில் ஏற்படும் அதிகப்படியான எரிச்சலைத் தான் அமில சுரப்பு அதாவது acidity என்று சொல்வார்கள். இத்தகைய அமில சுரப்பு ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் இருப்பது, வறுத்த மற்றும் காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுவது, அதிகமாக புகைப் பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்றவைக் குறிப்பிடத்தக்கவை. மேலும் காலை உணவைத் தவிர்ப்பது, வெறும் வயிற்றுடன் நீண்ட நேரம் இருப்பது, கொழுப்பு உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவது போன்ற வையும் அமில சுரப்பை ஏற்படுத்தக்கூடியவையே. இத்தகைய அமில சுரப்பைச் சில அறிகுறிகள் கொண்டு அறியலாம். அவை நெஞ்செரிச்சல், குமட்டல், வாந்தி, உணவு உண்ட பின் ஒரு மணி நேரத்தில் இருந்து நான்கு மணி நேரத்திற்குள் வயிற்றில் வலி அல்லது எரிச்சல் ஏற்படுவது, அடிக்கடி ஏப்பம், வாயில் கசப்பு சுவையை உணர்வது, அடிக்கடி பசி எடுத்தல் போன்றவை. ஆகவே இத...