Posts

Showing posts with the label othimalai murugan temple annur

ஓதிமலை முருகன் கோயில் பற்றி உங்களுக்கு தெரியுமா?

ஓதிமலைமுருகன். சத்தியமங்கலம் அருகே 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது  ஓதி மலை, இங்கே பழமையான முருகன் கோவில் அமைந்துள்ளது  .ஒதிமலையில் உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் ஐந்து  முகங்களும்  , எட்டு  கரங்களும்  கொண்ட ஸ்ரீ முருகபெருமான் அருள்பாலிக்கிறார் . ஆறுபடை உள்பட முருகபெருமான் வீற்றிருக்கும் மலைகளிலேயே இதுதான் மிகவும் உயர்ந்தது. கோவில் 1800  செங்குத்தான படிகளை  கொண்டது, மலையேற  சற்று சிரமமாகத்தான் இருக்கும்..  கைப்பிடி இல்லை ..வெயில் நேரத்தில் ஏறுவது கடினமாக இருக்கும்.    புஞ்சைப்புளியம்பட்டி யிலிருந்து சிறுமுகை -மேட்டுப்பாளையம் செல்லும் வழி அல்லது பவானிசாகரில் இருந்து சிறுமுகை செல்லும் வழியில் இரும்பறையை அடுத்து இந்த மலை உள்ளது. இது மிகப்பழமையான பாடல்பெற்ற முருகன் கோவிலாகும்.. சுவாமிமலையில்  சிவனுக்கு பிரணவத்தின்  பொருளை  உணர்த்திய   முருகன், இந்த ஓதிமலை தலத்தில் வேதம், ஆகமங்களை  உபதேசித்தார். இவ்வாறு சிவனுக்கு வேதம் ஓதி உபதேசம் செய்த மலை என்பதால் இந்த தலம் “ஓதிமலை” என்றும், சுவாமிக்கு “ஓதி...