Posts

Showing posts with the label வாழ்க்கைக்காக தான் பணம்..பணத்துக்காக வாழ்க்கையை இழந்து விடாதீர்கள்

வாழ்க்கைக்காக தான் பணம்... பணத்துக்காக வாழ்க்கையை இழந்து விடாதீர்கள்

கணவன் மனைவி இருவரும் ... ஒரு ஹோட்டலில் ஐஸ்கிரீம் சாப்பிட உட்கார்ந்தார்கள். என்னங்க... உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கணும்போல இருக்கு கேட்கவா.... இதென்ன புதுசா .. என்கிட்ட கேட்டா என்கிட்ட பேசுவா.... கேளு என சிரிச்சான் இல்ல, ஒரு மாசமா சீக்கிரம் வீட்டுக்கு வரீங்க...  அடிக்கடி வெளிய கூட்டிப்போறீங்க..  பொண்ணு கூட உட்கார்ந்து பாடம் சொல்லி குடுக்றீங்க.....  திடீரென நம்ம மேல நெருக்கமா மாறீட்டீங்க....  அதான்... என்று இழுத்தாள்... ஒண்ணுமில்லையே எப்பவும் போலத்தான் இருக்கேன். மறைக்காதீங்க ... உங்க முகரைய பார்த்தாலே தெரியுது... சொல்லுங்க என்னத்த சொல்ல.. ஏதும் சின்னவீடு செட் பண்ணிட்டிங்களா ..  அத மறைக்கத்தான் இப்படி கொஞ்சுறிங்களா நம்மகூட? போடி லூசு.. அவன் சிரித்தான்.  ஆனால் அதில் உயிரில்லை.  மெதுவாய் சொன்னான்..  நீயா கேட்பே சொல்லணும்னுதான் இருந்தேன் என கொஞ்சம் சீரியஸ் ஆனான். என்னங்க ஏதும் பிரச்சினையா படபடத்தாள்.... அவன் இல்லையென தலையாட்டியபடியே  அவனது அலுவலக பையை திறந்தான்.  ஒரு டைரியை திறந்து ஒரு பேப்பரை எடுத்து நீட்டினான்.  என்னங்க இது .. படி என சொல...