ஆறில் ஆரோக்கியம் !
ஆறில் ஆரோக்கியம் ! ஆறு அறிவு மனிதன் என்கிறோம். ஆனால் இவனுக்குத்தான் ஓராயிரம் நோய்கள். ஆறு விடையத்தை நீங்கள் கடைப்பிடித்தால் உங்களுக்கு உள்ள பிரச்சனை தீர்வதுடன் வாழ்நாள் முழுவதும் எந்த நோய்களும் வராது. இதோ ! 1 - பசி 2 - தாகம் 3 - உடல் உழைப்பு 4 - தூக்கம் 5 - ஓய்வு 6 - மன அமைதி பசி ! உங்கள் உடலுக்கு உணவு தேவையா இல்லையா என்பது சுவரில் தொங்கும் கடிகாரத்திற்கு தெரியுமா ? தெரியாதல்லவா பின் ஏன் நேரம் பார்த்து சாப்பீடுகிறீர்கள். யாரெல்லாம் நேரம் பார்த்து வேளாவேளைக்கு சரியாக சாப்பிடுகிறாரோ அவர் மிகப்பெரிய நோயாளி ஆகப்போகிறார் என்று அர்த்தம். இதைத்தான் வள்ளுவப்பெருமான் சொல்கிறார் "மருத்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்." விளக்கம் - நாம் ஏற்கனவே உண்ட உணவு செரித்த பின் மீண்டும் பசித்து சாப்பிட்டால் இந்த உடலுக்கு எந்த மருந்தும் தேவையில்லை என சொல்லியிருக்கிறார். "தீயள வன்றத் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப் படும்." விளக்கம் - பசியின் அளவு தெரியாமல் அதிகமாக சாப்பிட்டால் நோய் அளவில்லாமல் வரும் என்கிறார். பசியின் அளவு தெரியா...