Posts

Showing posts with the label Story and psychology philosophy

சித்திரகுப்தனுக்கே குழப்பம்!

ஒரு அரசன் அந்தணர்களுக்கு உணவளிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அப்படி ஒரு நாள் உணவளித்துக் கொண்டிருக்கையில் வானில் ஒரு கழுகு, தன் இரையான பாம்பு ஒன்றை தன் கால்களில் பற்றிக் கொண்டு கடந்து சென்றது. பாம்பின் வாயிலிருந்து ஒரு சில துளிகள் விஷம் அரசன் வைத்திருந்த உணவுப் பாத்திரத்தில் விழுந்து விட்டது.....!! எவரும் அதை கவனிக்க வில்லை. அரசன் அந்த உணவை ஒரு அந்தணருக்கு அளிக்க, அதை உண்ட மறு கணமே அவர் இறந்து போனார்.......!! அரசன் மிகவும் வருத்தம் அடைந்தான்.......!! கர்மா வினைகளை நிர்ணயிக்கும் சிதிரகுப்தனுக்கு குழப்பமாகி விட்டது....... !! யாருக்கு இந்த கர்மவினையைக் கொடுப்பது.....? கழுகிற்கா,... பாம்பிற்கா ..... அல்லது அரசனுக்கா?  கழுகு அதன் இரையைத் தூக்கிக் கொண்டு சென்றது...... அது அதன் தவறு இல்லை. இறந்து போன பாம்பின் விஷம்.... அதன் வாயிலிருந்து வழிந்தது பாம்பின் குற்றம் இல்லை.   அரசனும் .... இதை வேண்டுமென்றே செய்ய வில்லை.  அது அவனை அறியாமல் நடந்த விஷயம். சரி தன் எஜமான் எமதர்மனிடமே கேட்கலாம் என்று எமனிடம் சென்று தன் குழப்பத்தைக் கூறினான் சி...

கதையும் உளவியல் தத்துவமும்

 கதையும் உளவியல் தத்துவமும்   அவன் ஒரு பெரிய நாட்டின் மன்னன். நாட்டின் எல்லைகளை விஸ்தரிக்கத் தொடர்ந்து போர் புரிந்து கொண்டிருந்தான். ஒரு நாள் இரவு... தொலைதேசத்தில் ஒரு ராணுவப்பாசறையில் தங்கியிருந்த மன்னனின் காதில் ஒரு பூச்சி நுழைந்து விட்டது. திடுக்கிட்டு எழுந்தான். காதில் இருந்த பூச்சியை எடுக்கமன்னனைச் சேர்ந்தவர்கள் படாத பாடுபட்டார்கள். அவர்கள் முயற்சி எதுவும் பலிக்கவில்லை. சில வீரர்களை அழைத்துக்கொண்டு தலைநகரத்திற்குத் திரும்பினான் மன்னன். ராஜவைத்தியரிடம் பிரச்னையைச் சொன்னான். அவரும் எவ்வளவோ பாடுபட்டார். தொலைதூரத்தில் இருந்து மூலிகைகள் வரவழைக்கப் பட்டன. மூலிகையைப் பிழிந்து சாறு எடுத்து மன்னனின் காதிற்குள் விட்டார்கள். எதற்கும் பலன் இல்லை. மன்னனின் பிரச்னையைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பிரமாண்டமான பரிசுகள் அறிவிக்கப்பட்டன. எங்கிருந்தெல்லாமோ வைத்தியர்கள் வந்தார்கள். யாராலும் அந்தப் பூச்சியை வெளியே எடுக்க முடியவில்லை. மன்னனின் காதிற்குள் அந்தப் பூச்சி அங்கும் இங்கும் பறந்துகொண்டிருந்ததால் அவனால் தூங்க முடியவில்லை. உணவும் குறைந்து விட்டது. மன்னன் பொ...