Posts

குலதெய்வங்கள் என்றால் என்ன...?

குலதெய்வங்கள் என்றால் என்ன...? அவர்களின் பெருமை என்ன...? குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...? - சற்று ஒரு பார்வை... குலதெய்வம்... குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. அதன் சக்தியை அளவிடமுடியாது... எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும். குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் *குலதெய்வங்கள்* என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை. இன்று நம் வாழ்க்கைப்போக்கு, அதிகபட்சம் இரு பாட்டன், பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா உள்ளது..? நம் முன...

கடவுள் நம்பிக்கை உண்டா உங்களுக்கு...

இரண்டு அணில்கள் மரத்தில் ஏறி ஓடி விளையாடிக் கொண்டிருந்தன. அதில் ஒரு அணிலுக்குக் கடவுள் பக்தி அதிகம். எந்தக் காரியத்தைச் செய்தாலும் இறைசிந்தனை செய்துவிட்டு செய்வதும்  ஒவ்வொரு நன்மையிலும் கடவுளுக்கு நன்றி செலுத்துவதும் அதன் வழக்கம். அதன் தோழனான மற்ற அணிலுக்கோ கடவுள் நம்பிக்கையே கிடையாது .திட்டமிட்டு செயல் புரியும் புத்திசாலிக்குக் கடவுளே தேவையில்லை என்று அடிக்கடி சொல்லும் . அத்துடன் மற்ற அணிலையும் கேலி செய்து சிரிக்கும். கடவுள் பக்தியுள்ள அணில் இதையெல்லாம் கண்டு கொள்வதேயில்லை. விளையாட்டு மிகவும் சுவாரஸ்யமாகத் தொடர்ந்தது. நேரம் போவதே தெரியவில்லை உற்சாகத்துடன் ஓடிக் கொண்டிருக்கும் போது பத்திமான் அணில் பிடி வழுக்கி மரத்திலிருந்து கீழே விழுந்து விட்டது. காயம் எதுவும் படவில்லை என்ற போதிலும்  கொஞ்சம் வயிற்றில் அடிபட்டு வலித்தது. பெரிய ஆபத்திலிருந்து என்னைக் காப்பாற்றிய கடவுளே. உங்களுக்கு நன்றி  என்றது . இதைக் கேட்டதும் மரத்தில் இருந்த அணில் சிரி சிரியென்று சிரித்தது. கீழே விழுந்து மண்ணைக் கவ்வினாலும் உனக்கெல்லாம் அறிவே வராது. உன் கடவுள் எதுக்காக உன்னைத் தள்ளி வி...

மன முதிர்ச்சி

*மன முதிர்ச்சி என்றால் என்ன?* Mind maturity means?? 1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக்கொள்வது 2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்) ஏற்றுக்கொள்வது 3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல் 4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல். 5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல். 6. செய்வதை மன அமைதியுடன் செய்வது. 7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது. 8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல். 9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல். 10. எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சித்தல்.. 11. நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல். 12. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல என்ற நிலையை அடைதல். *இந்த 12 ல் அட்லீஸ்ட் ஒரு ஏழெட்டையாவது கடைபிடிக்க முயற்சித்தால் வாழ்க்கை எளிதாகிவிடும்.*

முருங்கைக்கீரை

முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணிவதுடன், மலச்சிக்கல் நீங்கும். முருங்கை காயை சமைத்து சாப்பிட்டால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். * முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு, மிளகு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால் உடம்பின்  வலிகள் நீங்கும். * முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும். * பற்களின் உறுதி, நீளமான முடியின் வளர்ச்சி, நரை முடி, தோல் நோய், வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய  நோய்களுக்கு முருங்கைக்கீரை நல்ல மருந்தாக உதவுகிறது

தினம் ஒரு மூலிகை

தினம் ஒரு மூலிகை ஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் உடலை பாதுகாக்க பழரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலம் பயக்கும். இதனால் உடல் வெப்பம் தணிவதோடு, மூலிகைகள், பழங்களில் உள்ள சத்துக்களால் உடல் நன்கு வலுப்பெறும். ஒவ்வொரு நாளும் நாம் அருந்த வேண்டிய உயிர் சத்துகள் நிறைந்த மூலிகைச்சாறு என்னவென்று பார்க்கலாம். *திங்கள் – அருகம்புல்☘* ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும். அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும். *செவ்வாய் – சீரகம்☘* இரண்டு டம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆ...

40 வகை கீரைகளும் அதன் முக்கிய மருத்துவ பயன்களும் :-

40 வகை கீரைகளும் அதன் முக்கிய மருத்துவ பயன்களும் :-  அகத்திக்கீரை - ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.  காசினிக்கீரை  - சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.  சிறுபசலைக்கீரை - சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.  பசலைக்கீரை - தசைகளை பலமடையச் செய்யும்.  கொடிபசலைக்கீரை - வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.  மஞ்சள் கரிசலை - கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.  குப்பைகீரை - பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.  அரைக்கீரை - ஆண்மையை பெருக்கும்.  புளியங்கீரை - சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.  பிண்ணாருக்குகீரை - வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.  பரட்டைக்கீரை - பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.  பொன்னாங்கன்னி கீரை - உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.  சுக்கா கீரை - ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.  வெள்ளை கரிசலைக்கீரை - ரத்தசோகையை நீக்கும்.  முருங்கைக்கீரை - நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.  வல்லாரை கீரை  - மூளைக்கு பலம் தரும்.  முடக்கத்...

தொப்பையை (பெல்லி) குறைக்க..

உடற்பயிற்சியானது ஒரு குறிப்பிட்ட பாகத்திற்கு மட்டும் என்பதில்லை. பொதுவாக உடற்பயிற்சி செய்தால், உடல் முழுவதுமே அப்பயிற்சியில் ஈடுபடுவதால், நிச்சயம் உடல் எடையுடன், தொப்பை என்று சொல்லப்படும் பெல்லி குறையும். அதற்கு தினமும் உடற்பயிற்சியுடன், ஒருசில தொப்பையையும் மேற்கொள்ள வேண்டும்.  அத்தகைய டயட்டை கீழேக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து, உடற்பயிற்சியுடன் சேர்த்து, இதையும் பின்பற்றினால், நிச்சயம் உடல் எடையுடன், வயிற்றினைச் சுற்றியுள்ள தொப்பையையும் குறைக்க முடியும். சரி, அதைப் பார்ப்போமா!!!  1. தண்ணீர்: தினமும் குறைந்தது 78 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு, உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். மேலும் அவ்வப்போது சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரிக்கும். இதனால் வயிற்றைச் சுற்றி காணப்படும் பெல்லியும் குறைந்துவிடும்.  2. உப்பை:தவிர்க்கவும் உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உப்பை அதிகம் சேர்த்தால், உடலில் தண்ணீரானது வெளியேறாமல், அதிகமாக தங்கிவிடும். எனவே உணவில் அதிகப...