Posts

முருங்கைக்கீரை

முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணிவதுடன், மலச்சிக்கல் நீங்கும். முருங்கை காயை சமைத்து சாப்பிட்டால் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். * முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு, மிளகு ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால், கை, கால் உடம்பின்  வலிகள் நீங்கும். * முருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும். * பற்களின் உறுதி, நீளமான முடியின் வளர்ச்சி, நரை முடி, தோல் நோய், வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய  நோய்களுக்கு முருங்கைக்கீரை நல்ல மருந்தாக உதவுகிறது

தினம் ஒரு மூலிகை

தினம் ஒரு மூலிகை ஆரோக்கியமாகவும், நோயில்லாமலும் உடலை பாதுகாக்க பழரசங்கள், மூலிகைச்சாறு குடித்தல் நலம் பயக்கும். இதனால் உடல் வெப்பம் தணிவதோடு, மூலிகைகள், பழங்களில் உள்ள சத்துக்களால் உடல் நன்கு வலுப்பெறும். ஒவ்வொரு நாளும் நாம் அருந்த வேண்டிய உயிர் சத்துகள் நிறைந்த மூலிகைச்சாறு என்னவென்று பார்க்கலாம். *திங்கள் – அருகம்புல்☘* ஒரு பிடி அருகம்புல், மிளகு, சீரகம், உப்பு ஒரு சிட்டிகை வீதம் மூன்று டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அது ஒரு டம்ளர் ஆனதும் காலை வேளையில் குடிக்க வேண்டும். அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், தொந்தி போன்ற பிரச்சனைகள் குறையும். குறட்டை சத்தம் நீங்கும். முடி நன்கு வளரும். இளநரை நீங்கும். எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும். இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். சளி, சைனஸ், ஆஸ்துமா, நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி போன்ற நோய்களை குணப்படுத்தும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். மலச்சிக்கல், மூட்டு வலி நீங்கும். *செவ்வாய் – சீரகம்☘* இரண்டு டம்ளர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆ...

40 வகை கீரைகளும் அதன் முக்கிய மருத்துவ பயன்களும் :-

40 வகை கீரைகளும் அதன் முக்கிய மருத்துவ பயன்களும் :-  அகத்திக்கீரை - ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.  காசினிக்கீரை  - சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.  சிறுபசலைக்கீரை - சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.  பசலைக்கீரை - தசைகளை பலமடையச் செய்யும்.  கொடிபசலைக்கீரை - வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.  மஞ்சள் கரிசலை - கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.  குப்பைகீரை - பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.  அரைக்கீரை - ஆண்மையை பெருக்கும்.  புளியங்கீரை - சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.  பிண்ணாருக்குகீரை - வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.  பரட்டைக்கீரை - பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.  பொன்னாங்கன்னி கீரை - உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.  சுக்கா கீரை - ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.  வெள்ளை கரிசலைக்கீரை - ரத்தசோகையை நீக்கும்.  முருங்கைக்கீரை - நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.  வல்லாரை கீரை  - மூளைக்கு பலம் தரும்.  முடக்கத்...

தொப்பையை (பெல்லி) குறைக்க..

உடற்பயிற்சியானது ஒரு குறிப்பிட்ட பாகத்திற்கு மட்டும் என்பதில்லை. பொதுவாக உடற்பயிற்சி செய்தால், உடல் முழுவதுமே அப்பயிற்சியில் ஈடுபடுவதால், நிச்சயம் உடல் எடையுடன், தொப்பை என்று சொல்லப்படும் பெல்லி குறையும். அதற்கு தினமும் உடற்பயிற்சியுடன், ஒருசில தொப்பையையும் மேற்கொள்ள வேண்டும்.  அத்தகைய டயட்டை கீழேக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து, உடற்பயிற்சியுடன் சேர்த்து, இதையும் பின்பற்றினால், நிச்சயம் உடல் எடையுடன், வயிற்றினைச் சுற்றியுள்ள தொப்பையையும் குறைக்க முடியும். சரி, அதைப் பார்ப்போமா!!!  1. தண்ணீர்: தினமும் குறைந்தது 78 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு, உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். மேலும் அவ்வப்போது சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரிக்கும். இதனால் வயிற்றைச் சுற்றி காணப்படும் பெல்லியும் குறைந்துவிடும்.  2. உப்பை:தவிர்க்கவும் உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உப்பை அதிகம் சேர்த்தால், உடலில் தண்ணீரானது வெளியேறாமல், அதிகமாக தங்கிவிடும். எனவே உணவில் அதிகப...

எந்த மென்பொருளுமின்றி …வெறும் ஐந்து STEP தான்..

பொதுவாக மொபைல் மூலம் கணினியில் இணைக்க அந்த மொபைல்க்கு தகுந்த மென்பொருள் கண்டறிந்து கணினி யில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த வேண்டி இருக்கும் அதற்க்கு உதாரணம் நோக்கியா மொபைல் பொறுத்த வரை NOKIA_PC _SUITE /OVI_SUITE சாம்சுங் மொபைல் க்கு SAMSUNG PC_SUITE / SAMSUG_KIES ஆன்ட்ராய்டு மொபைல் க்கு MOBOGENIE அப்படி இப்படி பல மாடல் பல வித மென்பொருள் தேடி தரவிறக்கம் செய்து அதன் மூலம் கணினியில் இணையம் பாவிப்பதை விட போதும் போதும் என்று ஆகி விடும். அதனால் தான் நான் இன்று சொல்லபோவது மிக சுலபமான வழி எந்த மென்பொருளுமின்றி …வெறும் ஐந்து STEP தான்.. தேவையானது: வெறும் USB டேட்டா கார்டு உங்கள் மொபைல் க்கு தகுந்தது. வழி முறை வழக்கம் போல் மொபைலை DATA CABLE மூலம் கணினியில் இணைத்து கொள்ளுங்கள். 1.CONTROL PANNEL செல்லவும் அடுத்து அங்கு 2.NETWORK AND SHARING என்பதினை கிளிக் செய்யவும் 3.SET UP A NEW CONNECTION என்பதினை கிளிக் செய்தவுடன் வரும் பகுதியில் CONNECT TO THE INTERNET என்பதினை செலக்ட் செய்ய பட்டுளதா என்று கவனித்து NEXT கொடுக்கவும் 4.DIAL-UP என்பதினை கிளிக் செய்யவும். அங்கு மீண்டும் வரும் திரையில...

அழகு என்பது பெண்களுக்கு மட்டும் அல்ல, ஆண்களுக்கும் தான்..

அழகு என்பது பெண்களுக்கு மட்டும் அல்ல, ஆண்களுக்கும் தான் என்பதை ஒவ்வொரு ஆண் மகன்களும் புரிந்து கொள்ள வேண்டும். இதனால் உங்கள் அழகை மெருகூட்ட நீங்களும் பேஸ்பேக் போடுங்கள். வெள்ளரிக்காய் மாஸ்க் வெயில் காலத்தில் வெள்ளரிக்காய் சிறந்த ஊட்டச்சத்து உணவாகவும், அழகுப் பொருளாகவும் பயன்படுகிறது. இது முகத்தை இறந்துபோன செல்களை நீக்கவும், முகத்திற்கு தேவையான எண்ணெய் பசையை தக்கவைக்கவும் உதவுகிறது. வெள்ளரிக்காயை நன்றாக மைய அரைத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் அப்ளை செய்யவும். 10 நிமிடம் ஊறவைத்து முகத்தை குளித்த நீரில் கழுவவேண்டும். வாரம் இருமுறை இந்த மாஸ்க் அப்ளை செய்தால் வெயிலால் முகம் கருக்காது. புத்துணர்ச்சியோடு இருக்கும். வெள்ளரிக்காயை தயிருடன் கலந்தும் மாஸ்க் போடலாம். தேன், முட்டை தேன் சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுகிறது. ஆப்பிள் சருமத்தில் உள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்குகிறது. ஒரு ஸ்பூன் தேனுடன், முட்டை வெள்ளைக்கரு, ஆப்பிள் கூழ் ஆகியவை கலந்து முகத்தில் அப்ளை செய்யலாம். 15 முதல் 20 நிமிடம் வரை இந்த கலவையை ஊறவைத்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ முகம் புத்துணர்ச்சி...

அமில சுரப்பு

பொதுவாக உண்ணும் உணவு செரிமானமாவதற்கு இரைப்பையில் சுரக்கும் அமிலம் தான் உதவியாக உள்ளது. ஆனால் இந்த அமிலமானது அளவுக்கு அதிகமாக சுரக்கும் போது, அவை இரைப்பையை அரிக்க ஆரம்பித்து, வயிற்றில் எரிச்சலை உண்டாக்குகிறது. இவ்வாறு வயிற்றில் ஏற்படும் அதிகப்படியான எரிச்சலைத் தான் அமில சுரப்பு அதாவது acidity என்று சொல்வார்கள். இத்தகைய அமில சுரப்பு ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் இருப்பது, வறுத்த மற்றும் காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுவது, அதிகமாக புகைப் பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்றவைக் குறிப்பிடத்தக்கவை. மேலும் காலை உணவைத் தவிர்ப்பது, வெறும் வயிற்றுடன் நீண்ட நேரம் இருப்பது, கொழுப்பு உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவது போன்ற வையும் அமில சுரப்பை ஏற்படுத்தக்கூடியவையே. இத்தகைய அமில சுரப்பைச் சில அறிகுறிகள் கொண்டு அறியலாம். அவை நெஞ்செரிச்சல், குமட்டல், வாந்தி, உணவு உண்ட பின் ஒரு மணி நேரத்தில் இருந்து நான்கு மணி நேரத்திற்குள் வயிற்றில் வலி அல்லது எரிச்சல் ஏற்படுவது, அடிக்கடி ஏப்பம், வாயில் கசப்பு சுவையை உணர்வது, அடிக்கடி பசி எடுத்தல் போன்றவை. ஆகவே இத...